மயிலாடுதுறை : சீர்காழி அருகே நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து பேருந்தில் செல்வதற்காக சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து இரு பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக வெளி நபர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பதற்றமான சூழ்நிலை நிலவியது. மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை பார்த்து ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அவர்களை தட்டிக் கேட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சீர்காழி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களுக்கு இடையேயான மோதலை தடுத்தனர். அப்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 12 பேரை விரட்டிப் பிடித்த சீர்காழி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் சட்டநாதபுரம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசும், போலீசும் ஏற்கனவே எச்சரித்துள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : விளாங்குறிச்சி கிராமம் அல்ல.. இனி அது ‘டாஸ்மாக் கிராமம்’ - கோயம்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை!