ETV Bharat / state

சீர்காழியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி

நாகை: சீர்காழி பகுதிகளில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

பனைவிதை நடும் நாகை மாவட்ட ஆட்சியர்  பிரவீன் பி. நாயர்

author img

By

Published : Oct 6, 2020, 12:35 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி பகுதியில் சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளையுடன் இணைந்து 1 லட்சம் பனை விதைகள் நடும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண் காக்க மாபெரும் பணியாய் ஒன்றாய் இணைந்து கரம் கோர்த்து பனை நடுவோம் வாருங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடியது பனைமரம் மட்டுமே என்பதால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பனை விதைகள் விதைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒருகட்டமாகச் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் இப்போது பனை விதைக்க முன் வருவோம் என்று மக்களிடம் பனை விதைகள் விதைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது இடங்கள், வயல் வரப்புகளில் பனை போட்டுத் தருவதாக கிராமங்கள், நகரங்கள்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

சீர்காழியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் - மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

அதன் தொடக்கமாக சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் 1 லட்சம் பனை விதைப்பு திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக நிம்மேலி ஊரட்சித் தலைவர், சீர்காழி நகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பனை விதைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சீர்காழி வட்டாட்சியர், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர் உள்ளிட்ட ஊராட்சி மன்றங்கள், சீர்காழி நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுத் தொடர்ந்து பனை விதை நடவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.