ETV Bharat / state

புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் - போக்குவரத்து பாதிப்பு!

நாகப்பட்டினம்: புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

nagapatinam
nagapatinam
author img

By

Published : Dec 29, 2019, 11:22 PM IST

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் அதிகரித்துள்ளதால் வேளாங்கண்ணி வளைவுமுதல் பேராலயம்வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் போக்குவரத்து பாதிப்பு

இதனால் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ’பிரதமர் உரையை வீட்டிலிருந்து கேட்கலாம்’ - அமைச்சர் செங்கோட்டையன்!

Intro:தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள் ; போக்குவரத்து பாதிப்பு.Body:தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள் ; போக்குவரத்து பாதிப்பு.

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதே போல விடுமுறை நாளான இன்று காலை முதல் அளவுக்கதிகமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா , கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வாகனங்கள் அதிகரித்துள்ளதால் வேளாங்கண்ணி ஆர்ச் முதல் பேராலயம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் சிரமத்தை சந்தித்துள்ள சுற்றுலாவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புத்தாண்டு பண்டிகைக்கு அதிகமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வர இருப்பதால் போக்குவரத்தை உரிய முறையில் சரி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.