தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிறு, குறு தொழில் செய்து வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வருவாய் இழந்து உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி மத்திய அரசு 20ஆம் தேதி முதல் ஒரு சில நிபந்தனைகளுடன் சிறு மற்றும் குறு தொழில்கள் இயங்க அனுமதி அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது.
நாகையில் திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வரும் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சுபநிகழ்ச்சிகளில் நெருங்கிய உறவினர்கள் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், புகைப்படக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது போல தங்களுக்கும் வாரியம் அமைத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் போட்டோ ஸ்டுடியோக்கள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் புகைப்படக் கலைஞர்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் முடங்கிய சிறு, குறு தொழில்கள்