நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள தென்பாதியில் மளிகை கடை ஒன்றின் அருகே நிறுத்தியிருந்த மிதிவண்டியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நீண்ட நேரம் போராடி திருடிச்சென்றுள்ளார்.
முதலில் அந்த நபர் மிதி வண்டியின் அருகே நீண்ட நேரம் அமர்ந்து பூட்டின் தன்மை குறித்தும், பொதுமக்கள் வருகை குறித்தும் கவனித்து காத்திருந்துள்ளார். அதன்பின் மக்கள் நடமாட்டம் அதிகமானதும், அங்கிருந்து செல்வது போல், சிறிது நேரம் கழித்து வந்து மிதிவண்டியை திருடும் பணியில் ஈடுபட்டு, நீண்ட போராட்டத்திற்கு பின் திருடிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் மிதிவண்டியை போராடி திருடிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து நிறைந்த சாலையிலேயே மிதிவண்டியை கூட விட்டுவைக்காத திருடர்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்