மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஜனவரி 27ஆம் தேதி தன்ராஜ் சவுத்ரி (50), அவரது மருமகளைத் தாக்கி கட்டி வைத்துவிட்டு தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா(45), மகன் அகில் (24), ஆகியோரை கழுத்தையறுத்துக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 12.5 கிலோ நகைகள், ரூ.6.90 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான காவலர்கள் எருக்கூரில் மறைந்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் மஹிபால் சிங், மணிஷ், ரமேஷ் பட்டீல் ஆகிய மூவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மற்றொரு கொள்ளையன் கர்ணாராம் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார். இதில், மஹிபால்சிங் நகைகளை எடுத்து தருவதாக கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். இதனால், மஹிபால்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பின்னர் வடமாநில கொள்ளையர்கள் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (பிப்.10) கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மணிஷ், ரமேஷ் பாட்டில், கர்ணாராம் ஆகியோரை மயிலாடுதுறை விரைவு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்னிலையில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் மூவரையும் மூன்று நாள் விசாரணை செய்ய காவலில் காவல் துறையினர் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து மூவரும் சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: இரட்டைக் கொலை வழக்கு: என்கவுன்டரில் இறந்த கொள்ளையன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!