ETV Bharat / state

சாலையில் வழிந்தோடும் பாதாளச்சாக்கடை கழிவுநீர் - போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

நாகை: மயிலாடுதுறையில் பாதாளச்சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு எற்படுவதைத் தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

drainage problem
பாதாளசாக்கடை கழிவுநீர்
author img

By

Published : Dec 18, 2019, 6:21 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தரமற்ற முறையில் பாதாளச்சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இங்கு கடந்த 2 வருடங்களாக பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை குழாய் உடைப்பால் சாலைகள் சேதமடைந்து சரிசெய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் பாதாளச் சாக்கடை கழிவுநீரை ஆறுபாதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தரங்கம்பாடி சாலையில் பெரிய பள்ளம் உருவாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை சீரமைக்கும் பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிற காரணத்தினால், போக்குவரத்தை தருமபுரம் சாலை, சின்னமாரியம்மன் கோவில் ஆகிய சாலை வழியாக மாற்றி விடப்பட்டது.

சாலையில் வழிந்தோடும் பாதாளசாக்கடை கழிவுநீர்

பாதாளசாக்கடை குழாய் உடைப்பால் சின்னமாரியம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் வீட்டின் கொல்லைப்புரங்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் வீட்டின் உள்ளே சாக்கடை நீர் புகுவதாக குற்றம்சாட்டி, வாகனங்கள் செல்லமுடியாத வழியில் சாலையின் குறுக்கே மரத்தைப் போட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துறையினர், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!

Intro:மயிலாடுதுறையில் சாலையில் வழிந்தோடும் பாதாளசாக்கடை கழிவுநீரால் சுகாதாரசீர்கேடு. நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியல் போராட்டம்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தரமற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக பாதாளசாக்கடை குழாய் பல்வேறு இடங்களில் உடைந்து சாலை சேதமடைந்து சரிசெய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் பாதாளசாக்கடை கழிவுநீர் ஆறுபாதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் குழாய் உடைந்து தரங்கம்பாடி சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 1மாதத்திற்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து தருமபுரம் சாலை மற்றும் சின்னமாரியம்மன் கோவில் தெரு வழியாக மாற்றி விடப்பட்டது. பாதாளசாக்கடை குழாய் உடைப்பால் கழிவு நீர் சின்னமாரியம்மன் கோவில் தெரு குயிருப்பு பகுதி மற்றும் வீட்டின் கொல்லைப்புரங்களில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவதாகவும் மேலும் அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் வீட்டின் உள்ளே சாக்கடைநீர் புகுவதாக குற்றம்சாட்டி வாகனங்கள் செல்லமுடியாமல் சாலையின் குறுக்கே மரத்தை போட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், காய்ச்சல் ஏற்பட்டு வருவதாகவும் நடவக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.