ETV Bharat / state

குத்தாலத்தில் பதநீர் வியாபாரி கொலை! இருவர் கைது - Patanir salesman

நாகை: மயிலாடுதுறை அருகே பதநீர் வியாபாரி கொலையில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பதனீர் வியாபாரி
author img

By

Published : Jun 17, 2019, 11:14 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் நேற்று காலை ஒருவர் மர்மமான முறையில் இருந்து கிடப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த பதநீர் வியாபாரி முரளி என்பதும், குத்தாலத்தில் உள்ள மாமியார் வீட்டில் மனைவியுடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் முரளியின் மனைவியான திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், திவ்யாவின் தம்பியான செல்வகணபதி அவரது நண்பனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதேபகுதியில் பதுங்கியிருந்த திவ்யாவின் தம்பி செல்வகணபதியை கைது செய்து விசாரித்ததில், தனது அக்காவான திவ்யாவை அடிக்கடி தரக்குறைவாக பேசியதால், ஆத்திரமடைந்து தனது நண்பர் கமலஹாசனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Intro:மயிலாடுதுறை அருகே பதனீர் வியாபாரி கொலையில் திடுக்கிடும் தகவல். சகோதரியை துன்புறுத்தியதால் கத்தியால் குத்திக்கொலை செய்த மைத்துனர் நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு:-Body:நாகை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று காலை நீடாமங்கலத்தை சேர்ந்த பதனீர் வியாபாரி முரளி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து முரளியின் மனைவி திவ்யாவிடம் குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். திவ்யாவின் தம்பி செல்வகணபதி இரவு முழுவதும் தலைமறைவாக இருந்ததை தெரிந்து சந்தேகப்பட்ட போலீசார் செல்வகணபதியை தேடி வந்தனர். குத்தாலம் சென்னியநல்லூர் சாலையில் பைக்கில் ஒரு வாலிபருடன் சென்ற செல்வகணபதியை போலீசார் பிடித்துச்சென்று காவல் நிலையத்தில் விசாரித்தபோது, தன் நண்பருடன் சேர்ந்து மைத்துனரைக் கொலை செய்ததை செல்வகணபதி ஒப்புக்கொண்டான். விசாரணையில், திவ்யா 2 ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலத்தில் வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றதும், அவரை மீண்டும் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்த முரளி, அதையே காரணம் காட்டி தொடர்ந்து திவ்யாவை துன்புறுத்தி வந்ததும், அதன் காரணமாக செல்வகணபதி, தனது மாமனார் வீட்டுக்கு வந்த முரளியை, தனது நண்பர் கமலஹாசனுடன் இணைந்து மதுகுடிக்க வைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, மதுபாட்டிலால் முரளியின் தலையில் அடித்தும், கத்தியால் வயிற்றில் குத்திக் கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் குத்தாலம் போலீசார் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.