திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 'பசியில்லா தமிழகம்' என்ற அமைப்பில் எண்ணற்ற இளைஞர்கள் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் ஆதரவில்லாமல், சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகரப்பகுதியில் ஆதரவின்றி சாலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு வழங்கினர்.
மேலும் இந்த அமைப்பினர் சக மனிதர்களை நேசிக்கும் மனிதநேயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். அவர்களின் இந்த செயல் பொதுமக்களிடத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதையும் படியுங்க:
தூய்மையில் தேசிய அளவில் சிறந்த மாநிலம் தமிழகம் - பிரதமர் விருது