புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 9 மாணவிகள் 8 மாணவர்கள் உள்பட 17 மாணவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிர்மூர் கிராமத்தில் நவோதயா பள்ளியில் பயின்றுவருகின்றனர்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மனு அளித்துள்ளனர்.
அதில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தங்களது பிள்ளைகள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தவித்துவருவதாகவும், அவர்களை போர்க்கால அடிப்படையில் காரைக்கால் அழைத்துவரவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: கொடைக்கானலில் 67 கட்டட தொழிலாளர்கள் மீட்பு