மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 34 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிவரும் சு. சுதாவிற்கு தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் செப்.,5ஆம் தேதி வழங்கப்பட்டது.
விருது பெற்று நேற்று (செப். 06) பள்ளிக்கு திரும்பிய நல்லாசிரியர் சுதாவிற்கு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆதீன மேலவீதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து ஆசிரியை சுதாவிற்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்த மாணவச் செல்வங்கள் அவருக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், விருது பெற்ற ஆசிரியரை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் விருதுபெற்ற ஆசிரியருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துவந்தனர். தொடர்ந்து, பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் சக ஆசிரியர்கள் நல்லாசிரியர் சுதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் - அமைச்சர் கோரிக்கை