நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பு செயலாளர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிதியினை அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிதாக பதவியேற்ற இதுநாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 7 மாத மானிய நிதி குழு மானியத்தொகை உடனே வழங்க வேண்டும். ஊராட்சி மன்றங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: வெல்ல ஆலைகளில் எம்.பி., திடீர் ஆய்வு: வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவல்கள்!