புரெவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பழவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளமானது பழவாற்று கரையை தாண்டி தேனூர், கொண்டல், வள்ளகுடி உள்ளிட்ட கிராமத்திற்குள் புகுந்தது.
அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் முழ்கின.
பழவாற்றில் தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பழவாற்று கரை உடையும் நிலையில் உள்ளது.
எனவே பழவாற்று கரையை மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புரெவி புயல்: தண்ணீரில் மிதக்கும் சென்னை!