ETV Bharat / state

கொள்முதல் நிலையத்தில் தேக்கமடையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை! - 30 thousand metric tons of paddy stagnation

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் தேக்கமடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

farmers
farmers
author img

By

Published : Sep 12, 2020, 1:56 PM IST

மயிலாடுதுறையில் 80-க்கும் மேற்பட்ட நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினசரி சராசரியாக 800 நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்படுகின்றன. தினசரி விவசாயிகள் சுமார் இரண்டாயிரம் மூட்டைக்கும் மேலாக நெல்லை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர். இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைகின்றன.

சராசரியாக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஐந்தாயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுமார் பத்தாயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் விற்பனைக்காக திறந்தவெளியில் அடுக்கிவைத்து காத்திருக்கின்றனர். கடந்த சில நாள்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்ல லாரிகள் வராததால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும், கரோனா ஊரடங்கால் நெல் மூட்டைகளை அரவைக்கு கொண்டுசெல்ல சரக்கு ரயில்கள் சரிவர வராததாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்தத் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக கொள்முதல் செய்வது நிறுத்திவைக்கப்பட்டதால் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளான நல்லத்துக்குடி, கொற்கை, மணக்குடி, மணல்மேடு, திருவாளபுத்தூர், இளந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்மூட்டைகளை அடுக்கிவைத்து காத்துக் கிடக்கின்றனர்.

இதனிடையே அவ்வப்போது பெய்யும் மழையால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. நெல்மணிகள் விதைவிட்டு முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனையடைகின்றனர். எனவே உடனடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலி: சிசிடிவி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.