நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோயில், இன்று நான்காம் ஆண்டு பால்குட திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், மஞ்சளாடை உடுத்தி, பால்குடம் சுமந்து சென்றனர். மேள வாத்தியங்களுடன் நம்பியார் நகர் புதிய ஒளிமாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தது.
பின்னர் பக்தர்கள் வங்கக்கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காக்க வேண்டியும், பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதையும் படிங்க: மீன் வளம் பெருக வேண்டி முளைப்பாரி எடுத்த மீனவ பெண்கள்!