மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 4ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இந்தத் திருவிழாவில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் தேரோட்டம், உதிரவாய் துடைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன. இச்சமயங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.
இந்நிலையில், கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிழாக்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதனால் ஒழுகைமங்கலம் அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா ரத்துசெய்யப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர்,வீதி வீதியாகச் சென்று பல்வேறு கிராமங்களில் ஒலிபெருக்கியில் அறிவித்து வருகின்றனர். பக்தர்கள் அடுத்த ஆண்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனைச் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ’கரோனா விதிமீறலில் இதுவரை 10 லட்சம் அபராதம் வசூல்’ - புதுக்கோட்டை ஆட்சியர்