ETV Bharat / state

நாகையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம் - Private bus topples in Nagai

நாகை: தரங்கம்பாடி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Over 10 injured as private bus topples in Nagai, நாகையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
author img

By

Published : Nov 15, 2019, 8:39 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தனியார் பேருந்தானது நாகை மாவட்டம் பொறையாறு வழியாக சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

உடனடியாக சக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொறையார் காவல் துறையினர் பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

Over 10 injured as private bus topples in Nagai, நாகையில் அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிதம்பரத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் நடராஜன்(39) பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், லேசான காயமடைந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து பெறையார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

Intro:தரங்கம்பாடி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து. 10க்கும் மேற்பட்டோர் காயம். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு:-

Body:புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு வழியாக சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து நண்டலாறு சோதனைச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொறையார் காவல்துறையினர் பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிதம்பரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் நடராஜன்(39) பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், லேசான காயமடைந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து பெறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகப்பட்டினம் - சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.