குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைபேசியில் உள்ள டார்ச் லைட்டை எரிய விட்டபடி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி திமுக மாவட்டச் செயலாளர் கௌதமன், அமமுக மாவட்டச் செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கடலூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர் வெட்டிக்கொலை!