ETV Bharat / state

சி.ஏ.ஏ. எதிர்ப்பு: 650 அடி தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி

நாகை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 650 அடி நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி
தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி
author img

By

Published : Jan 19, 2020, 8:23 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும் அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள செம்மங்குளத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணியாகச் சென்றனர்.

பேரணியில் 645 அடி நீளமுள்ள தேசிய கொடியை தலைக்குமேல் உயர்த்திப் பிடித்தவாறும், கறுப்பு நிற பலூன்களை கைகளில் ஏந்தியும் மத்திய அரசிற்கு எதிராக முழக்கமிட்டவாறு சென்றனர்.

தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி

நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இப்பேரணி சின்னக்கடை வீதியில் முடிவடைந்தது. பின்னர் அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். பேரணியை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கேரளாவைப் போல தமிழ்நாடு அரசும் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'

Intro:650 அடி நீள தேசிய கொடி ஏந்தி, இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்:-

Body:குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செம்மங்குளத்தில் தொடங்கிய பேரணியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக 645 அடி நீள தேசிய கொடியை தலைக்குமேல் உயர்த்தி பிடித்தவாறும், கருப்பு நிற பலூண் ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி சின்னக்கடை வீதியில் முடிவடைந்தது. அங்கு தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 6000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.