மயிலாடுதுறை:Mayiladudurai Public protest against ONGC well:மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் அஞ்சலவார்த்தலை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டது.
அதனை அறிந்த அப்பகுதி மக்கள் அத்திட்டத்தை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று அஞ்சல்வார்த்தலை கிராமத்திலிருந்த ஓஎன்ஜிசி தளவாடப் பொருட்களை லாரியில் ஏற்றி மல்லியம் மஞ்சளாறு பகுதியில் செயல்படாமல் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருப்பி அனுப்பப்பட்ட தண்டவாளப் பொருட்கள்
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அங்கு புதிய எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான முயற்சியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில், தளவாடப் பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை மறித்து சாலையில் அமர்ந்து முழக்கமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வந்த ஓஎன்ஜிசி துணை மேலாளர் அன்பரசு மற்றும் குத்தாலம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி தளவாடப் பொருட்களை ஏற்றி வந்த லாரி மீண்டும் அஞ்சல்வார்த்தலை கிராமத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:Document Writer Welfare Finance Commission: ஆவண எழுத்தாளர் நல நிதி ஆணையம் உருவாக்கி அரசாணை வெளியீடு