ETV Bharat / state

சாராய மூட்டைகள் கடத்திவந்த இருசக்கர வாகனம் மோதி ஒருவர் படுகாயம் - nagapattinam accident news

ஆழியூரில் சாராய மூட்டைகள் கடத்திவந்த இருசக்கர வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஒருவர் படுகாயம்
ஒருவர் படுகாயம்
author img

By

Published : Oct 16, 2021, 7:07 PM IST

நாகை: ஆழியூர் பிரிவு சாலையில் சாலையோர டீ கடையில் பன்னீர்செல்வம் என்பவர் நின்று கொண்டிருந்தார். இவர் மீது காரைக்காலிலிருந்து சாராய மூட்டைகள் கடத்திவந்த இருசக்கர வாகனம் மோதியதில், அவரது கால் முறிந்தது.

இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் சாராயம் கடத்திவந்த வண்டியையும், வாகனத்திலிருந்த இரண்டு நபர்களையும் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கீழ்வேளூர் காவல் துறையினர், சாராய கடத்தலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லமுயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாராய கடத்தல்காரர்களுக்கு ஆதரவாகக் காவலர்கள் செயல்படுவதாகக் கூறி சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்களைக் காவலர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: புதிய வெளியிட்டு தேதியை அறிவித்த 'சூர்யவன்ஷி' !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.