ETV Bharat / state

ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராய ஊறல் அழிப்பு! - One lakh worth of alcohol soaking eradication

மயிலாடுதுறை : சீர்காழி அருகே கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராய ஊறல்களை புதுப்பட்டினம் காவல் துறையினர் அழித்தனர்.

சாராய ஊறல் அழிப்பு
சாராய ஊறல் அழிப்பு
author img

By

Published : May 26, 2021, 7:58 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் சில சாராய ஊறல்கள் இருப்பதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், புதுப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கோட்டைமேடு பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் நடுவே சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராய ஊறல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய காவல் துறையினர், கீழே ஊற்றி அழித்தனர். இது தொடர்பாக புதுப்பட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.