மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் வேல்ராம்பட்டு துர்கா காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் எட்டு பேருடன் காரில் திருநள்ளாறு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை அருகே முக்கூட்டு என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பியுள்ளார். இதில் நிலை தடுமாறிய கார், சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த ராஜேஸ்வரி (30), சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர்.
விபத்து குறித்து செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் வழிப்பறி: மூவர் கைது