நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் அரிய வகை ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான நான்கு மாதங்கள் வந்து முட்டையிட்டு செல்கின்றன.
இந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர். ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளை குஞ்சு பொறித்த உடன் அவற்றை வனத்துறையினர் கடலில் விடுகின்றனர்.
அடிக்கடி ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீன்பிடி வலைகளில் சிக்கி இறப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளப்பள்ளம் கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் 300 கிலோ எடையும் ஐந்து அடி நீளம் கொண்ட டால்பின் மீன் மற்றும் இரண்டு ஆலிவ் ரிட்லி ஆமைகள் கரை ஒதுங்கின. இது குறித்து, நாகப்பட்டினம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரை ஒதுங்கிய டால்பின்!