ETV Bharat / state

ஆடு, மாடு கொட்டகைகள் அமைத்த திட்டத்தில் பல லட்சம் முறைகேடு - சமூக ஆர்வலர் புகார்

அதிமுக ஆட்சியின்போது முழு மானிய திட்டத்தில் ஆடு, மாடு கொட்டகைகள் அமைத்த திட்டத்தில் இறந்தவர் பெயரிலும் பலலட்சங்களை அரசு அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆடு மாடு கொட்டகைகள் அமைத்த திட்டத்தில் பல லட்சம் முறை கேடு செய்த அதிகாரிகள்

author img

By

Published : Oct 10, 2022, 10:55 PM IST

மயிலாடுதுறை: காழியப்பநல்லூர் என்.என். சாவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்பரத் என்பவர் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதாவிடம் அளித்த மனுவில் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத போது தனிஅதிகாரிகள் கண்காணிப்பில் ஊராட்சி நிர்வாகம் நடபெற்றது.

2018-2019ஆம் நிதியாண்டில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பல ஊராட்சிகளில் 100 சதவிகித முழுமானியத்தில் (இலவசமாக) கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகைகள் அமைத்துகொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. சந்திரபாடி, காட்டுச்சேரி, எடுத்துக்கட்டி, மாமாகுடி, திருச்சம்பள்ளி, விசலூர் ஆகிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட கொட்டகைகள் குறித்து தகவல் அறியும் உரிமைசட்டத்தில் விண்ணப்பித்து பெற்ற விபரத்தின்படி மேற்கண்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட கொட்டகைகள் பார்க்க சென்றபோது பல ஊராட்சிகளில் ஆடு, மாடு கொட்டகையே அமைக்கப்படவில்லை.

ஒருசில ஊராட்சிகளில் பயனாளியின் பெயரை அறிந்து சென்றுபார்த்தபோது இறந்தவர்கள் பெயரில் கொட்டகை போட்டதாக கணக்கு காண்பித்துள்ளனர். இந்த ஊராட்சிகளில் மட்டுமே 74 லட்சத்திற்கு மேல் அரசு அதிகாரிகள் அரசு பணத்தை முறைகேடாக கையாடல் செய்துள்ளனர்.

ஆடு மாடு கொட்டகைகள் அமைத்த திட்டத்தில் பல லட்சம் முறை கேடு செய்த அதிகாரிகள்

கொட்டகை கட்டியதாக பயனாளிகளுக்கு தெரியாமலேயே பயனாளிகளின் பெயர் கணக்கில் காட்டப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள ராஜ்பரத் ஆட்சியர் தலைமையிலோ அல்லது நேர்மையான அதிகாரிகளை கொண்டு தனிக்குழு அமைத்து செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆடு, மாடு கொட்டகை திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தவறு செய்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: புழு பூச்சிகள் மிதக்கும் நீரை பயன்படுத்தும் மாணவர்கள் - நோய் தொற்று அபாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.