ETV Bharat / state

நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

நாகப்பட்டினம்: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
author img

By

Published : Apr 26, 2019, 5:15 PM IST

ஃபானி புயல் எச்சரிக்கையையடுத்து, நாகை துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதிகளையும், மீனவர்களையும் எச்சரிக்கும் விதமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடுத்தும் நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைளிலும் ஈடுபடாததால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்களை கரை திரும்பக் கூறி படகின் உரிமையாளர்களும், அவர்களின் உறவினர்களும் வாக்கி டாக்கி மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Intro:வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Body:வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உருவாக உள்ள ஃபானி புயலை அடுத்து, நாகை துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதிகளையும், மீனவர்களையும் எச்சரிக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டான ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னதாக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஈடுபடாததால் நாகை மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்களை கரை திரும்ப கூறி படகு உரிமையாளர்களும், அவர்களின் உறவினர்களும் வாக்கி டாக்கி மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.