மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் மயிலாடுதுறையில் உள்ள பழங்காவிரிக்கும் குளங்களுக்கும் செல்லும் நீர் வழிப்பாதைகள் தூர்வாரப்படாமலும் ஆக்கிரமிப்பிற்குள்ளானதாலும், பெரும்பாலான குளங்கள் வறண்ட நிலையில் உள்ளன. மழைநீர் மட்டுமே தேங்கிக் கிடக்கிறது.
2017ஆம் ஆண்டு வழக்கறிஞர் கனகசுந்தரம் தொடர்ந்த வழக்கில், மயிலாடுதுறை பழங்காவிரியை தூர்வாரி நீர் வழிப்பாதைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, 84 குளங்களில் தண்ணீர் நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று வழக்கறிஞர் கனகசுந்தரம் தலைமையில் வர்த்தகர்கள், வழக்கறிஞர்கள் சேவை அமைப்பினர் ஒன்று சேர்ந்து மயிலாடுதுறையில் உள்ள குளங்களைப் பார்வையிட்டனர்.
பல ஆண்டுகளாகத் தண்ணீரின்றி வறண்ட டவுன்ஸ்டேசன் குளம், மட்டகுளம், கேணிக்கரை பகுதியிலுள்ள அம்பலா குளங்களைப் பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் மூலம் பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்பட்டன. ஆனால் பழங்காவிரி முழுமையாகத் தூர்வாரப்படாததாலும், குளங்களுக்குச் செல்லும் நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்தும் இருந்ததனால் பெரும்பாலான குளங்களுக்குத் தண்ணீர் போய்ச் சேரவில்லை.
இது குறித்து ‘நம்ம மயிலாடுதுறை இயக்கம்’ சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் கனகசுந்தரம், ’சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தபோது அளித்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும் மீண்டும் நகராட்சியின் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாகவும்’ தெரிவித்தார்
இதையும் படிங்க: