ETV Bharat / state

டெல்டா மாவட்டங்களில், 8 ஆண்டுகளாக பொய்த்துப் போன குறுவை சாகுபடி!

நாகப்பட்டினம்: காவிரி நீர் வராததையடுத்து, நீர் நிலைகளில் வறண்டு காணப்படுவதால், குறுவை சாகுபடி 8ஆவது ஆண்டாக பாதிக்கப்பட்டுள்ளது என, டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

விவசாயம்
author img

By

Published : Jul 9, 2019, 10:22 AM IST

Updated : Jul 9, 2019, 11:29 AM IST

சாலைகளின் இரு மருங்கிலும் பச்சை பசேலென நெற்கதிர்கள், வழிநெடுகிலும் சிலுசிலுவென பாயும் ஓடைகள், வயல்வெளிகளில் பெண்களின் தன்னே நானே கீதம், தென்றலுக்கு ஏற்றாற்போல் ஆடி, அசையும் நெல்மணிகள் என, தஞ்சை தரணி எங்கும் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த பூமி, இன்று வறண்டு பொட்டல்காடு பூமியாக மாறி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரியிலிருந்து தண்ணீர் வரும். அதனைக் கொண்டு குறுவை சாகுபடியைத் தொடங்கலாம் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு கண்ணீர் தான் மிச்சம். ஏனென்றால், கடந்த ஏழாண்டுகள் போலவே ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை 8ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் திறக்க முடியாமல் தமிழ்நாடு அரசு கைவிரித்துள்ளது.

இதனால் கலங்கிப் போய் நிற்கும் டெல்டா மாவட்ட கடைமடை விவசாயிகள், குறுவை சாகுபடியை நம்பி இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் பயிர் செய்ய 13 லட்சம் விவசாயிகள் தயாராகி வந்தனர். இதற்காக வயல்வெளி உளவு பணியைத் தொடங்கி அவர்களின் தலைமையில் இடியாய் வந்திறங்கியது மேட்டூர் அணை இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படாது என்ற செய்தி.

டெல்டா மாவட்டங்களில், எட்டாண்டுகளாக பொய்து போன குறுவை சாகுபடி!

குறுவைக்குத் தண்ணீர் இல்லாததால் விவசாயப் பணிகளைச் செய்ய முடியாத கூலித் தொழிலாளர்கள், தற்போது 100 நாள் பணிக்குச் செல்கின்றனர். இதில் கிடைக்கும் சொற்ப வருமானமே குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக் கூறும் கூலி விவசாயிகள், குறுவை சாகுபடி உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே தங்களது வாழ்வாதாரமும் காக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாய வேலை கிடைக்காததால் தற்போது 100 நாள் வேலையில் வரும் வருமானம், இலவச அரிசியும் தற்கால பசியைப் போக்கி வருவதாகக் கூறும் விவசாய பெண்கள், போதிய மழை இல்லாததால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கிடைக்காமல் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் வடகிழக்கு பருவமழையின்போது கர்நாடக அரசு மிதமிஞ்சிய தண்ணீரைத் தமிழ்நாட்டை நோக்கி விடுவதும், அதனைச் சேமிக்க முடியாத கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லாததும் தான் காரணம் என சொல்லும் கடைமடை விவசாயிகள், காவிரியில் நீர் இருப்பு உள்ள போதே தண்ணீர் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

கனமழையின் போது கடலில் வீணாகக் கலக்கும் மழை நீரைச் சேமித்து வைக்கக் கடைமடைப் பகுதிகளில் கதவுடன் கூடிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும், யோசனை கூறுகின்றன. மேலும் காவிரியிலிருந்து தண்ணீர் தராமல் டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக மாற்றி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் எண்ணத்தில் மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளதாக அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

Intro:டெல்டா மாவட்டங்களில் ,எட்டாம் ஆண்டாக பொய்த்துப்போன குருவை சாகுபடி.

Body:டெல்டா மாவட்டங்களில் ,எட்டாம் ஆண்டாக பொய்த்துப்போன குருவை சாகுபடி.

சாலைகளின் இரு மருங்கிலும் பச்சை பசேலென நெற்கதிர்கள், வழிநெடுகிலும் சிலுசிலுவென பாயும் ஓடைகள், வயல்வெளிகளில் பெண்மணிகளின் தன்னை நானே கீதம், தென்றலுக்கு ஏற்றாற்போல் ஆடி ,அசையும் நெல்மணிகள் என, தஞ்சை தரணி எங்கும் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த பூமி, இன்று வற்றி, வரண்டு பொட்டல்காடு பூமியாக மாறி வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் கர்நாடகமா? அல்லது கனமழை மற்றும் காவிரி நீரை காக்கத் தவறிய தமிழகத்தின் கட்டமைப்பா?

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வருணபகவான் கை கொடுத்தது மட்டுமல்லாமல், காவிரியின் நீர் வளமும் தந்தது, இதன் காரணமாக முப்போகம் விளைவித்து அதன் மூலம் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்த தமிழக விவசாயிகள். இப்போது ஒரு போகும் விதைக்க வழி கிடைக்குமா என விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் கடந்த பல ஆண்டுகளாக சரியான நேரத்தில் மழை கை கொடுக்காததும், காவிரி நீர் விவசாயிகளுக்கு கிடைக்காததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து தண்ணீர் வரும் அதனைக் கொண்டு குறுவை சாகுபடியை துவங்கலாம் என காத்திருக்கும் விவசாயிகளுக்கு கண்ணீர் தான் மிச்சம். ஏனென்றால், கடந்த 7 ஆண்டுகள் போலவே ஜூன் 12-ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை எட்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் திறக்க முடியாமல் தமிழக அரசு கைவிரித்துள்ளது.

இதனால் கலங்கிப் போய் நிற்கும் டெல்டா மாவட்ட கடைமடை விவசாயிகள் , டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடியை நம்பி இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் 13 லட்சம் விவசாயிகள் தயாராகி வந்தனர். இதற்காக வயல்வெளி உளவு பணியை தொடங்கி அவர்களின் தலைமையில் இடியாய் வந்திறங்கியது மேட்டூர் அணை இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி திறக்கப்படாது என்ற செய்தி.

இதனால் செய்வதறியாது திகைத்து உள்ள 13 லட்சம் விவசாயிகளும் அதனைச் சார்ந்துள்ள நாலு லட்சம் தொழிலாளர்களும் இந்த ஆண்டும் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி தீர்ப்பு, மேலாண்மை வாரியம் ஒழுங்காற்று குழு இவையெல்லாம் பலன் அளிக்கவில்லை என்றால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை சாவுகளை எவராலும் தள்ளிவைக்க முடியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.

21 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின்னரும் காவிரி நீர் கடைமடை வரை பாயாமல் காலம் கடந்து வருவதாக கூறும் டெல்டா விவசாயிகள், கன மழை காலங்களில் கர்நாடக அரசு நீரை இருப்பு வைக்க முடியாமல் வெள்ள நீரை வெளியேற்ற கூடிய வடிகாலாக இன்றைக்கு தமிழகம் மாறிப் போனது ஏன்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தியாவின் உணவு உற்பத்தியில் தன்னிறைவாக்கும் தமிழகம், இப்போது ஒரு போக சாகுபடிக்கு காவேரி நீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனக் கூறும் விவசாயிகள், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து காலத்தின் போது அந்த நீரை வாங்கி தந்தால் மட்டுமே டெல்டா பகுதி விவசாயிகள் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி செய்ய முடியும். இல்லையேல், பஞ்சம், புலம்பெயர அகதிகள் போல் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவல சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறுவைக்கு தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத கூலி தொழிலாளர்கள், தற்போது 100 நாள் பணிக்கு செல்கின்றனர். இதில் கிடைக்கும் சொற்ப வருமானமே குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக் கூறும் கூலி விவசாயிகள், குறுவை சாகுபடி உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே தங்களது வாழ்வாதாரமும் காக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாய வேலை கிடைக்காததால் தற்போது 100 நாள் வேலையில் வரும் வருமானம், இலவச அரிசியும் தற்கால பசியைப் போக்கி வருவதாக கூறும் விவசாய பெண்மணிகள், போதிய மழை இல்லாததால் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் கிடைக்காமல் அதுவும் கஷ்டத்தில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் வடகிழக்கு பருவமழையின்போது கர்நாடக அரசு மிதமிஞ்சிய தண்ணீரை தமிழகத்தை நோக்கி விடுவதும், அதனை சேமிக்க முடியாத கட்டமைப்புகள் தமிழகத்தில் இல்லாததும் தான் என காரணம் சொல்லும் கடைமடை விவசாயிகள் காவிரி நீரை காவிரியில் நீர் இருப்பு உள்ள போதே அதனை பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்புகின்றனர்.

கனமழையின் போது கடலில் வீணாக கலக்கும் மழை நீரை சேமித்து வைக்க கடைமடை பகுதிகளில் கதவுடன் கூடிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும், யோசனை கூறுகின்றன.

மேலும் காவிரியிலிருந்து தண்ணீர் தராமல் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்றி இங்கு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தும் எண்ணத்தில் மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளதாக அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

பேட்டி- 01 தனபாலன் பொதுச்செயலாளர் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

02.சேரன் தலைவர் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

04 தமிழ்ச்செல்வன் தலைவர் கடைமடை விவசாயிகள் சங்கம்

Conclusion:
Last Updated : Jul 9, 2019, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.