மயிலாடுதுறை: மகாளய அமாவாசை நாளான இன்று (அக். 6) பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகளில் மூதாதையர்களுக்குத் திதி செலுத்துவது வழக்கம். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் பெருமளவு கூடும்பட்சத்தில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான தகுந்த இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரைகளில் இன்று முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எந்தக் கடற்கரைப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு கரோனா நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டும் அரசு, தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறந்துள்ளது கவனிக்கத்தக்க அம்சமாகும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகச் சிறுவர்-சிறுமியர் பூங்காவையும் திறக்க அனுமதித்துள்ளது அரசு.
இதையும் படிங்க : தீரா காதல்: மனைவிக்கு சிலை வைத்து முதலாம் ஆண்டு நினைவு நாளை சிறப்பித்த கணவர்