ETV Bharat / state

Farmers Demand: குப்பைகளைத் தரம் பிரித்துத்தர மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த விவசாயிகள் - Nature farmers demanding the public for the quality of garbage sorting in Mayiladuthurai

Farmers Demand:மயிலாடுதுறை அருகே மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்துத்தர, பொதுமக்களின் காலில் விழுந்து இயற்கை விவசாயிகள் கோரிக்கை வைத்தநிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகளை தரம் பிரித்து தர பொதுமக்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த இயற்கை விவசாயிகள்

author img

By

Published : Dec 23, 2021, 7:26 PM IST

Updated : Dec 23, 2021, 7:39 PM IST

மயிலாடுதுறை: Farmers Demand: மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனக் குப்பைகளை வகை பிரித்து வழங்க பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு சார்பில் ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் என்னவோ குப்பைகளை அவ்வாறு வகைப்படுத்தாமல், தூய்மைப் பணியாளரிடம் மொத்தமாக கொடுத்து விடுகின்றனர்.

மொத்தமாக குப்பைகளைக் கொடுத்தால் பிரிப்பது கடினம்

இதனால் இதனை மொத்தமாக சேகரித்து சென்று, தூய்மைப் பணியாளர்கள் குப்பைக் கிடங்கில் வைத்து பிரித்தெடுப்பது என்பது பெரும் சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது. அதுமட்டும் இன்றி அவைகள் பெரும் மலைபோல் மாறி, அவ்வப்போது தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.

பொதுநலத்திற்காக மக்களின் காலில் விழுந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயிகள்

இந்நிலையில் மாப்படுகை ஊராட்சியில் அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில், மேலும் சில விவசாயிகள் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து வீடுகள்தோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து வழங்க வலியுறுத்தி, பொதுமக்களின் கால்களில் விழுந்து கோரிக்கை விடுத்தனர்.

குப்பைகளைத் தரம் பிரித்துத்தர மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த விவசாயிகள்

மேலும் அவ்வாறு குப்பைகளைத் தரம் பிரித்து கொடுத்தால் மக்கும் குப்பைகளை வயலுக்கு இயற்கை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை, பிளாஸ்டிக் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் ஆலைகளில் அதனை விற்பனை செய்து, அதில் வரும் வருவாயில் ஊராட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் போன்றவற்றை எடுத்துக் கூறினர்.

தூய்மைப் பணியாளர்களுடன் இயற்கை விவசாயி பொதுமக்களின் கால்களில் விழுந்து குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதன் அவசியத்தை எடுத்துக் கூறிய சம்பவம் ஊராட்சி மக்களிடையே நெகிழ்ச்சியும், மாற்றத்தையும் ஏற்ப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: Video: சரஸ்வதி முன்னிலையில் லட்சுமியை (லஞ்சம்) கேட்ட தீயணைப்புத்துறை அலுவலர்!

Last Updated : Dec 23, 2021, 7:39 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.