ETV Bharat / state

ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு.. மயிலாடுதுறையில் செயல்முறை விளக்கம்! - நானோ யூரியா

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்

ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணி தொடக்கம்..!

author img

By

Published : Dec 22, 2022, 7:20 AM IST

ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணி தொடக்கம்..!

மயிலாடுதுறை: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல் விளக்கத்துடன் நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அகரகீரங்குடி கிராமத்தைச் சேர்ந்த 300 விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து, யூரியா தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நானோ யூரியாவை ட்ரோன் மூலம் வயல்களில் தெளிக்கும் செயல்முறை விளக்க பணியையும் தொடங்கி வைத்தார்.

ஒரு மூட்டை யூரியாவிற்கு பதில் அரை லிட்டர் திரவ நானோ யூரியாவை பயன்படுத்தி ட்ரோன்கள் மூலம் வயல்வெளிகளில் தெளிப்பதால், விரைவாகவும், சிக்கனமாகவும் பணியை முடிக்கலாம் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கினர். இதனை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல் விளக்கத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 8 அடி நீள கருஞ்சாரை பாம்பை அசால்ட்டாக பிடித்த பாம்பு பாண்டியன்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.