கரோனா அச்சம் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை மதிக்காமல் நாகை அடுத்த நாகூர் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் நேற்று (ஜூலை 12) குவிந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் உறவினர்களுடன் திரண்ட பொதுமக்கள் எந்தவிதமான கரோனா அச்சமும் இல்லாமல் கடற்கரையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். முகக்கவசம் உள்ளிட்ட எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் மக்கள் கூடுவதால், கரோனா பரவுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகூர் கடற்கரையில், காவலர்களை பாதுகாப்பு பணிக்கு அமர்த்தி பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:அரியலூரில் 7 நாள்கள் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க வியாபாரிகள் முடிவு!