நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வு தேசிய விளையாட்டு ஆணையத்தின் - ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் மாணவர்கள் பிரிவில் 50 பேரும் மாணவிகள் பிரிவில் 35 பேரும் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 24 மாணவர்கள், இம்மாதம் 19 முதல் 24ஆம் தேதி வரை திருச்சி தொட்டியத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு மாணவர்கள் தேர்வு - மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
நாகை: மாநில அளவில் கூடைப்பந்து போட்டிக்கான மாணவ, மாணவிகள் தேர்வு நடைபெற்றது.