ETV Bharat / state

அண்ணாதுரையின் பெயராலேயே வரையப்பட்ட ஓவியம்: உலக சாதனை படைத்த மாணவி! - ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு

நாகப்பட்டினம்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் படத்தை ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தத்துரூபமாக வரைந்து கல்லூரி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

nagapattinam
அண்ணாதுரை
author img

By

Published : Aug 19, 2021, 11:00 AM IST

நாகை மாவட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதி. இவர் தனியார் கலைக் கல்லூரியில் கணினி இரண்டாமாண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

பொதுமுடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே ஆன்லைன் கல்வியைப் பயின்று வரும் சுதி, மீதமிருக்கும் நேரத்தை ஓவியத்தில் செலவிடத் தொடங்கியுள்ளார்.

பலரின் உருவங்களை தத்ரூபமாக வரையத் தொடங்கிய இவரது ஓவிய கலைப் பயணத்திற்கு, தற்போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் படம் மூலம் உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவரது பெயரில் உள்ள C.N Annadurai என்கிற ஆங்கில எழுத்துகளை 704 முறை பயன்படுத்தி, அண்ணாவின் உருவப்படத்தை தத்ரூபமாக சுதி வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வெறும் 45 நிமிடம் 59 விநாடிகளில் வரைந்தும் அவர் அசத்தியுள்ளார்.

'அண்ணாதுரை' பெயரிலே உருவாக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படம்

இதனை ஆன்லைனிலே கண்காணித்த ’ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’ ((JACKHI BOOK OF WORLD RECORDS) அமைப்பினர், சுதியின் இந்தப் புதிய முயற்சியை உலகச் சாதனையாக அறிவித்து, அவருக்கு சான்றிதழும் விருதும் வழங்கினர்.

இதையும் படிங்க: இந்திய அளவில் கெத்து காட்டிய கொடைக்கானல் பள்ளி மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.