தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து கடலோரப் பகுதிகளில் மழை பெய்துவந்தது. மேலும், கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இந்த நிலையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்தடுத்து உருவான காரணத்தால் இந்திய வானிலை மையம் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடுத்திருந்தது.
இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், விழுந்தமாவடி, கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் துறைமுகங்களில் படகுகளைப் பாதுகாப்பாக கட்டிவைத்து மீன்பிடிக்கச் கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 20) கடல் சீற்றம் தனித்ததையடுத்து மீன்வளத் துறை மூலம் கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 12 நாள்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.