ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, உலக நன்மை வேண்டியும், மீன் வளம் பெருகவும் நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் மேளதாளங்கள் முழங்க மீன் கொடியினை கையிலேந்தி சீர்வரிசை தட்டுகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால் குடத்தை சுமந்து ஏழைப் பிள்ளையார் கோவில், புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தனர்.
அதன்பின்னர், பெண்கள் எடுத்துவந்த பாலினை கொண்டு உலக நன்மை வேண்டியும், கடலில் மீன் வளம் பெருகவும் நீலாயதாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
இதையும் படிங்க: வடலூர் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; நாளை ஜோதி தரிசனம்