ETV Bharat / state

மர்மக்காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரச் சீர்கேட்டை சரி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை!

author img

By

Published : Oct 11, 2019, 11:59 PM IST

நாகப்பட்டினம்: ஐவநல்லூர் கிராமத்தில் பெயர் தெரியாத காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

mysterious fever

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், ஐவநல்லூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். பெயர் தெரியாத காய்ச்சல் ஆனது கிராம மக்களிடையே இடைவிடாது பரவி வரும் சூழலில் காய்ச்சல் பாதிப்பால் பலருக்கு கை, கால் வீக்கம், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

Mysterious Fever Affected In Nagapattinam District
பன்றிகளால் பரவும் பெயர் தெரியாத காய்ச்சலால் கிராம மக்கள் அவதி

மேலும் சிலர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலி விவசாயத் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

காய்ச்சல் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கிராமம் முழுவதும் பன்றிகள் சுற்றித் திரிவதாகவும், அதுமட்டுமின்றி குப்பைகள், டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கின்றது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பெயர் தெரியாத காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமம்

தற்போது கிராமம் முழுவதும் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை, காய்ச்சல் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கிராமத்தை சூழ்ந்த காய்ச்சல்: பொதுமக்கள் பீதி!

Intro:மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமம் : சுகாதார சீர்கேட்டை சரி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை.

Body:மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமம் : சுகாதார சீர்கேட்டை சரி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களே அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் நிலையில், நாகை மாவட்டம், ஐவநல்லூர் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டவர் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காய்ச்சலானது கிராம மக்களிடையே இடைவிடாது பரவி வரும் சூழலில் காய்ச்சல் பாதிப்பால் பலருக்கும் கை, கால் வீக்கம் தலைவலி, உடல் வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் சிலர் நாகை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலி விவசாய தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

காய்ச்சல் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கிராமம் முழுவதும் பன்றிகள் சுற்றித் திரிவதாகவும், அதுமட்டுமின்றி குப்பைகள் மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் பல இடங்களில் நீர் தேங்கி இருப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நாகை நகராட்சி உள்ளிட்ட பல இடங்களில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது கிராமம் முழுவதும் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை காய்ச்சல் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி - 01.அமுதா, ஐவநல்லூர்

02. கல்யாணசுந்தரம், ஐவநல்லூர்

03. செல்வராஜ் ஐவநல்லூர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.