ETV Bharat / state

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கிராஸிங்: பொதுமக்கள் அவதி! - mayiladudurai

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே பராமரிப்பு காரணங்களுக்காக முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

train
author img

By

Published : May 8, 2019, 8:16 AM IST

மயிலாடுதுறை அடுத்த நீடூர் என்ற இடத்தில் ரயில்வே லெவல் கிராஸிங் உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகளுக்காக நேற்று காலை முதல் மாலை வரை ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து, மணல்மேடு, பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாதையாக இந்த சாலை இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கம்.

எச்சரிக்கையையும் மீறி ரயில் பாதையைக் கடந்த பொதுமக்கள்

இந்நிலையில், முன்னறிவிப்பின்றி ரயில்வே கிராஸிங் திடீரென மூடப்பட்டதால் நீடூரைத் தாண்டிச்செல்லும் வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டியிருந்ததால், பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை மிகுந்த சிரமத்துடன் ரயில் தண்டவாளத்தைக் கடந்துச் சென்றனர்.

இதனால், அந்த பகுதியை கடந்து சென்ற விரைவு ரயில்கள் மிகக்குறைந்த வேகத்தில், ஒலி எழுப்பியவாறே சென்றன. ரயில்வே நிர்வாகம் மாற்றுப்பாதை எதுவும் ஏற்பாடு செய்யவில்லை என்றாலும், குறைந்தபட்சம் தகுந்த அறிவிப்பையாவது செய்திருக்கலாம் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Intro:Body:

மயிலாடுதுறை ஆர்.செல்லப்பா 07.05.19

மாவட்டம் : நாகை

செல் : 7339283771

மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று காலை முதல் மாலை வரை முன்னறிவிப்பின்றி மூடல், உயிரைப்பயணம் வைத்து, ரயில் தண்டவாளத்தை வாகனங்களுடன் தாண்டிச்சென்ற பொதுமக்கள்:-

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் என்ற இடத்தில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இங்கு பராமரிப்பு பணிக்காக காலை முதல் மாலை வரை ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து, மணல்மேடு, பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாதையாக இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. இந்நிலையில், நீடூரை தாண்டிச்செல்லும் வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டிதால், பொதுமக்கள், ரயில்வே தண்டவாளத்தை வாகனங்களுடன் மிகுந்த சிரமங்களுடன் தாண்டிச்சென்றனர். இதனால், அந்த பகுதியில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மிகக்குறைந்த வேகத்தில், ஒலி எழுப்பியவாறே சென்றன. ரயில்வே நிர்வாகம் மாற்றுப்பாதை எதுவும் ஏற்பாடு செய்யாத நிலையில், குறைந்தபட்சம், தகுந்த அறிவிப்பாவது செய்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.