தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல இடங்களில் 'அன்புச்சுவர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இல்லாதவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் இருப்பவர்கள் தங்களுக்கு பயன்படாத நல்ல பொருள்களை ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டப்பட்ட அன்புச்சுவற்றின் அலமாரிகளில் வைப்பார்கள். இதன்மூலம் இல்லாத ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்.
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவாட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தின் வாயிலில், சமூக செயற்பாட்டாளர் சதீஷ்சத்யா என்பவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உதவும் வகையிலான அன்புச்சுவர் ஒன்றை அமைத்தார்.
இதனை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதில் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: நாகை அருகே ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!