சென்னைக்கு தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆம்பன் புயலாக மாறியுள்ளது.
ஆம்பன் புயல் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆம்பன் புயல் வரும் 20ஆம் தேதி மேற்குவங்கம், ஒடிசா அருகே நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு