ETV Bharat / state

'பொய்யாக சாதி குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளார்' - மன்னம்பந்தல் ஊராட்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் ஊராட்சி தலைவர் டிஜிட்டல் டிவைஸ்சை தவறான முறையில் பயன்படுத்தி ரூ.9 லட்சம் முறைகேடு செய்து விட்டு, அதை மறைப்பதற்கு சாதி ரீதியாக பாகுபாடு காட்டி நாடகம் ஆடுவதாக குற்றஞ்சாட்டி ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Oct 15, 2020, 2:06 AM IST

பொய்யாக சாதிக்குற்றச்சாட்டை கையில் எடுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்: ஊராட்சி ஊழியர்கள் போராட்டம்!

மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா பெரியசாமி ரோலிங் சேர் வாங்கியதற்கு சாதிரீதியாக அவமானப்படுத்தியதாகவும், ஊராட்சி வளர்ச்சி நிதியை பெற கையெழுத்துயிடுவதற்கு கமிஷன் கேட்பதாகவும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 12ஆம் தேதி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயிலில் அமர்ந்து பிரியா பெரியசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்னை தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், மன்னம்பந்தல் ஊராட்சி உறுப்பினர்கள், கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று (அக். 14) மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினர் மைதிலி கூறுகையில், “தங்களது ஊராட்சியில் சாதிப் பிரச்னை இதுவரை எழவில்லை. துணைத் தலைவரின் அனுமதி இல்லாமல், அவரின் டிஜிட்டல் டிவைஸ்யை பயன்படுத்தி ரூபாய் 9 லட்சத்திற்கான நிதியை பெற்றுள்ளது குறித்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்ததால் ஊழலை மறைப்பதற்கு தலைவர் குடும்பத்தினர் சாதி பிரச்னையை தூண்டுகின்றனர்.

ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதிராக ஊராட்சி ஊழியர்கள் போராட்டம்

ஊராட்சி மன்ற தலைவர் பிரியா அலுவலகத்திற்கு வருவதில்லை. அவருக்கு பதிலாக தலைவரின் தந்தை பெரியசாமி, தாய் சசிகலா, சகோதரர் சூர்யாதான் ஆட்சி செய்கின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...'உனக்கெல்லாம் எதுக்கு ரோலிங் சேர்' - சாதி ரீதியாக பாகுபாடு;பட்டியலின ஊராட்சி தலைவர் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.