நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி, மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி, மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்வது வரவேற்கத்தக்கது. இதனை அரசியலாக்க வேண்டாம். தமிழில் அர்ச்சனை செய்ய போதிய ஓதுவார்கள், குருக்கள் இருப்பதை பொறுத்து அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
மேலும், மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டது திமுக அரசுதான். அதற்கு தடை வாங்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இது ஊருக்கே தெரியும். இன்று எதிர்க்கட்சிகள் விளம்பரத்திற்காக போராடி வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: அரசுத் தேர்வுகளில் உள்நுழையும் கறுப்பு ஆடுகள் விரைவில் களையப்படும் - ஜெயக்குமார்