நாகை மாவட்ட புதிய ஆட்சியராக பிரவீன் நாயர் இன்று பொறுப்பேற்று கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க பாடுபடுவேன் என்றும், விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : இனி அரசின் இந்த ஆப்பைக் கொண்டு டிராக்டர்களை வாடகைக்கு பெறலாம்!