நாகை மாவட்டம் சீர்காழியில் 160-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகளின் உரிமையாளர் சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று மாலை புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் அரசு வழிகாட்டுதல்படி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் லாரி உரிமையாளர்கள் 130 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டன. அதன்படி தலைவராக எருக்கூர் வேலு, செயலாளராக வெங்கடேசன், பெருளாளராக மனோகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து பேசிய புதிய நிர்வாகிகள், வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா எதுவும் நடத்த வேண்டாம் எனவும். அதற்காக நேரமும், பணமும் விரையம் செய்யாமல் ஆக்கப்பூர்வமான செயல்களில் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரூர், போக்குவரத்து அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி