ETV Bharat / state

ஐம்பது நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நாகை கலங்கரை விளக்கம்

நாகை: இலங்கை வெடிகுண்டு தாக்குதலையடுத்து, பாதுகாப்பு கருதி மூடப்பட்ட கலங்கரை விளக்கம் ஐம்பது நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

port
author img

By

Published : Jun 27, 2019, 8:10 PM IST

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒருபகுதியாக நாகப்பட்டினத்தில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு பார்வையாளர்கள் செல்ல ஏப்ரல்27ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

நாகை கலங்கரை விளக்கம்

இந்நிலையில், தற்போது 50 நாட்கள் கழித்து கலங்கரை விளக்கத்தை காண மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Intro:இலங்கை வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு கருதி மூடப்பட்ட கலங்கரை விளக்கம் பார்வையாளர்களுக்கு மீண்டும் திறப்பு.

Body: இலங்கை வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு கருதி மூடப்பட்ட கலங்கரை விளக்கம் பார்வையாளர்களுக்கு மீண்டும் திறப்பு.

இந்தியா முழுவதும் 183 கலங்கரை விளக்கங்கள் உள்ளது, அதில் தமிழ்நாட்டில் மட்டும் 22 கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலங்கரை விளக்கமும் வெவ்வேறு வண்ணங்களாலும், கற்களாலும் பல்வேறு வகையான ஒளிரும் தன்மை உடையதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், கடலில் இரவு நேரங்களில் கப்பலில் செல்லும் போது, ஒளி வெளிவரும் தன்மையை வைத்து அது எந்த ஊரில் உள்ள கலங்கரை விளக்கம் என்பதை அறிய முடியும். அதே போல பகல் நேரங்களில் அதனுடைய வண்ணங்களையும், கற்களின் தன்மையும் கொண்டு அது எந்தப் பகுதி என்பதை அறிய முடியும் இதற்காக அனைத்து நாடுகளிலும் உள்ள கப்பல்களிலும் கலங்கரை விளக்கம் குறித்து பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை என்பது 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்புகளில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.

இதனை அடுத்து இந்தியாவில் பல்வேறு கட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் ஒன்றாக மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம், கலங்கரை விளக்க துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் நாகப்பட்டினத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தை கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி முதல் பாதுகாப்பு கருதி பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் 42 மீட்டர் உயரமுடைய கரும் பாறை கற்களால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி பார்வையாளர்கள் நாகை நகரின் அழகையும் ,கடல் பரப்பு முழுவதையும் கண்டு கழிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தற்போது 50 நாட்கள் கழித்து கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி நாகையின் அழகை காண்பதற்காக பார்வையாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அனைத்து நாட்களிலும் பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் இதற்காக அனுமதி கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும் சிறியவர்களுக்கு மூன்று ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 25 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.