புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர். சென்ற 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக 2017ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.
இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிறுத்தப்பட்டுள்ள போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கக் கோரியும், மாதா மாதம் சம்பளத்தை முறையாக வழங்க வலியுறுத்தியும் தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் காரைக்காலில் இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது அவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த பரிசோதனையாளர்கள், ஓட்டுனர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் மூன்றாவது நாளாக நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலகம் வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்