இப்போராட்டத்தில், புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை மயிலாடுதுறை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் இளவரசை காவல் துறையினர் கைது செய்ய சென்றபோது அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து காவல் துறையினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: உள்ளிருப்பு போராட்டத்தில் வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய உறுப்பினர்கள்!