நாகை மாவட்டம் கோடியக்கரையில் தங்கி வெளியூர் மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். இந்நிலையில் கோடியக்கரையில் வெளியூரை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபடுவதால் உள்ளுர் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக கோடியக்கரை மீனவர்கள் புகார் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் , வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த பத்தாயிரம் மீனவர்கள் ஆயிரக்கணக்கான படகுகளை கரையில் நிறுத்தி வெளியூர் மீனவர்களுக்கு தடைவிதிக்கும்வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க...சென்னையில் விட்டுவிட்டு மழை தொடரும்!