ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு... நிறுவனச் சின்னங்களை எரிப்பு!

நாகப்பட்டினம்: கடைமடைப் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காமேஸ்வரத்தில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும், வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவன சின்னங்களை எரித்தும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

HYdrocarbon Protest
author img

By

Published : May 29, 2019, 7:31 AM IST

டெல்டா மாவட்ட கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்தில் 158 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வேதாந்தா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் அப்பகுதி விவசாயிகளும், மீனவர்களும் ஹைட்ரோகார்பன் எடுக்க முற்பட்டால் வேதாந்தா ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு கடும் எதிர்ப்பு

இந்நிலையில், நேற்று காமேஸ்வரத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சோலைவனத்தைப் பாலைவனமாக்கும் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய கிராம மக்கள், அந்நிறுவனங்களின் சின்னத்தினை எரித்து தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

Intro:கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காமேஸ்வரத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: வேதாந்தா ஓஎன்ஜிசி நிறுவன சின்னங்களின் காகிதங்களை எரித்தும் கண்டனம்:

Body:கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காமேஸ்வரத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: வேதாந்தா ஓஎன்ஜிசி நிறுவன சின்னங்களின் காகிதங்களை எரித்தும் கண்டனம்:

டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் 158 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்க முற்பட்டால் வேதாந்தா ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில்  ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் வீடுகளில் கருப்பு கொடி  ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சோலைவனத்தை, பாலைவனமாக்கும்  வேதாந்தா, ONGC நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்திய கிராம மக்கள், அந்நிறுவனங்களின் சின்னத்தின் காகிதங்களை எரித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காமேஸ்வரம் கிராம மக்கள் இதனை தமிழக அரசு தடுக்கவில்லை என்றால் விவசாயிகள், மீனவர்களை ஒன்று திரட்டி நாகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:ஆறு-சரவணன் காமேஸ்வரம். நாகை

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.