ETV Bharat / state

வாய்க்காலை தூர்வாரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் விவசாயிகள் மனு!

நாகை: பாசன வாய்க்கால்களை தூர்வாரக் கோரி அவற்றின் புகைப்படங்களை கழுத்தில் அணிந்து, மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் விவசாயிகள் மனு அளித்தனர்.

வாய்க்காலை துர்வாரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் விவசாயிகள் மனு!
author img

By

Published : Jun 1, 2019, 9:46 AM IST

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை நம்பி இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இதில், டெல்டா மாவட்டத்தின் கடைமடைப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆறு, ஏரி, வாய்க்கால்கள் இன்னும் தூர்வாரப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் மேட்டூர் அணையிலிருந்து கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வருவது என்பது தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது.

இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள தேவநதி, வெட்டாறு, முடிகொண்டான் ஆறு உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர் வாருவதுடன், அங்கு பழுதடைந்து கிடக்கும் மதகுகளை சீரமைக்க வேண்டுமென கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் பழுதடைந்த வாய்க்கால்கள் மற்றும் சேதமடைந்த மதகுகளின் புகைப்படங்களை கழுத்தில் அணிந்தவாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

Intro:பாசன வாய்க்கால்களை தூர்வாரி, மதில்களை சீர் செய்யக்கோரி அவற்றின் புகைப்படங்களை கழுத்தில் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

Body:டெல்டா பகுதியில் தூர்ந்து கிடக்கும் ஆறு, வாய்க்கால்களை தூர்வார வேண்டும் எனக்கூறி நாகையில் கடைமடை விவசாயிகள் கழுத்தில் புகைப்படங்களை அணிந்து வந்து ஆட்சியரிடம் மனு. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை நம்பி இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் உள்ள பெரும்பாலான ஆறு, ஏரி, வாய்க்கால்கள் இன்னும் தூர்வாரப்படாமல் அப்படியே கிடைக்கின்றன. இதனால் மேட்டூர் அணையில் இருந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவது என்பது தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே நாகை மாவட்டத்தில் உள்ள தேவநதி, வெட்டாறு, முடிகொண்டான் ஆறு உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர் வாருவது உடன், அங்கு பழுதடைந்த கிடைக்கும் மதகுகளை சீரமைக்க வேண்டுமென கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் பழுதடைந்த வாய்க்கால்கள் மற்றும் சிதிலமடைந்த மதகுகளின் புகைப்படங்களை கழுத்தில் அணிந்தவாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர். அப்போது கூறிய விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறு பாசன வாய்க்கால்கள் இன்னும் தூர்வாரப்படாமல் அப்படியே கிடப்பதாக குற்றம் சாட்டியவர்கள், தேர்தல் முடிந்த பின்னரும் இம்மாதம் நடத்தவேண்டிய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் இதுவரை நடத்தாமல் இருப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், குறைதீர் கூட்டம் நடைபெறுவது தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக வரும் காலங்களில் குறைதீர் கூட்டத்தை முறையாக கூட்டி மாவட்டத்தில் தூர்வாராமல் உள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி குறுவை சாகுபடிக்கும் தண்ணீர் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி - தமிழ்ச்செல்வன் பாலையூர் நாகை

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.